search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Bus Stand"

    • பழனியில் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வரலாறு காணாத ஆக்கிரமிப்பு காணப்படுகிறது.
    • போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி :

    ஆன்மீக நகரானபழனியில் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வரலாறு காணாத ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன. சாமி தரிசனம் செய்ய நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவும் தயக்கம் காட்டி சென்றுவிடுகின்றனர்.

    இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டிய வண்ணம் உள்ளனர். கோவிலில் தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி முடிவு செய்தது. மேலும் புதிய பஸ்நிலைய ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது ஒருசிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை எடுத்துவிட்டனர். அகற்றப்படாத இடங்களை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அப்போது அங்கிருந்த ஒருபெட்டியை அகற்றினர். அதன் உரிமையாளர் யாரைக்கேட்டு எனக்கு சொந்தமான பொருளை எடுக்கிறீர்கள் என நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


    அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றபோது அவரை தாக்கி சட்டையை கிழித்தார். இதனால் மற்ற ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். நகராட்சி அதிகாரியை தாக்கிய கடைக்காரரை அங்கிருந்தவர்கள் வெளியேறுமாறு கூறவே அவர் பஸ்நிலையத்தை விட்டு சென்றுவிட்டார்.

    மேலும் நகராட்சி அதிகாரிகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்றனர். மேலும் கடைக்காரர்கள் பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×