search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa chitambaram"

    • நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவான்மியூர் மனோகரன் தலைமையில் நடக்கிறது.
    • தியாகராய நகரில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பில் உள்ள ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் தேசிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது 78-வது பிறந்தநாளை நாளை (சனிக்கிழமை) கொண்டாடுகிறார்.

    இதையொட்டி ப.சிதம்பரம் ஆதரவாளரும் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளருமான தி.நகர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் சென்னையில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று மாலை தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    நாளை காலை 7 மணிக்கு சென்னை காளிகாம்பாள் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பாம்பன் சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவான்மியூர் மனோகரன் தலைமையில் நடக்கிறது.

    தியாகராய நகரில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பில் உள்ள ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூக்கடை ஜீவா தலைமை வகிக்கிறார்.

    சைதாப்பேட்டையில் உள்ள அன்னை மறுவாழ்வு மையத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு மதியம் 12 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சைதை வில்லியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதியம் 12.30 மணிக்கு தரமணி பள்ளிப்பட்டு கானகத்தில் உள்ள சேவை சமய ஜெயம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது. தரமணி கோபி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்களில் உள்ள முதியோர்களுக்கு மதியம் 2 மணி அளவில் போர்வைகள் வழங்கப்படுகிறது. திருவான்மியூர் மனோகரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் போர்வை வழங்கப்படுகிறது.

    ×