search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation Lightning rowdy hunt"

    • மாநிலம்முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும்பணியை மேற்கொண்டனர்.
    • துணை கமிஷனர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்திநன்னடத்தை உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ரவுடிகள்மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்என சில நாட்களுக்குமுன் போலீஸ் உயரதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதற்கு 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்றும் பெயரிட்டுள்ளார். மாநிலம்முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும்பணியை மேற்கொண்டனர். அதில், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்கள், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களைபிடிக்க அந்தந்த மாநகர,மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும்பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் கமிஷனர்,எஸ்.பி., உத்தரவின்படி,தனிப்படைஅமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர் வழக்குகளில்தொடர்புடையவர்கள்,குற்றவாளிகள்,தலைமறைவானவர்கள்,பிடிவாரன்ட்உள்ளவர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில்பழைய , அடி தடி, கொலைமுயற்சி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில்இருந்து வெளி வந்து தலைமறைவானர்கள் என 141பேரை போலீசார் பிடித்தனர். இதில்21 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ளவர்களை,துணை கமிஷனர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்திநன்னடத்தை உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டது.  

    ×