search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIRF"

    • என்.ஐ.ஆர்.எப். தரவரிசை என்பது நாட்டின்  மிக உயரிய தரவரிசை.
    • இந்த தரவரிசை எங்கள் கல்வி சமூகத்தின் திறன்,ஆற்றல் வளம்  அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

    திருச்சி :

    திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்நாடு, என்.ஐ.ஆர்.எப்.  இந்திய தரவரிசை: 2022 இல்  ரேங்க்-பேண்ட்: 251 - 300 ல் இடம் பெற்றுள்ளதால், கல்லூரி தன் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    என்.ஐ.ஆர்.எப். தரவரிசை என்பது நாட்டின்  மிக உயரிய தரவரிசை. இது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய மதிப்பீடாகும், இந்த தரவரிசை அந்த கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த தரத்தை பிரதிபலிக்கிறது. என்.ஐ.ஆர்.எப். தரவரிசையை அடைவதற்கு தேவையான முன்னேற்றம் மிகவும் நுணுக்கமானது, புறநிலை மற்றும் வெளிப்படையானது,

    எனவே எங்கள் கல்லூரி மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலையை அடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். இந்த தரவரிசை எங்கள் கல்வி சமூகத்தின் திறன்,ஆற்றல் வளம்  அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்த மாபெரும் சாதனை கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் வெற்றி மகுடத்தில் இன்னொரு நல்முத்தாக மாறியுள்ளது.

    எங்களது கல்லூரி மதிப்புமிக்க இந்த அங்கீகாரத்தை ஒரே நாளில் அடையவில்லை, ஆனால் அதற்கு ஒரு குறுப்பிடத்தக்க கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காக பல்வேறு முயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்வதை ஒரு மரபாக எங்களது கல்லூரி கொண்டுள்ளது.  

    எங்கள் கல்வி நிறுவனம் இத்தகைய ஒரு பெரிய நிலையில் அடைய பல்வேறு முறைகளில் முழு மனதுடன் உதவி செய்து, ஆதரவு நல்கி , ஒத்துழைப்பு தந்த பங்குதாரர்கள், பொது மக்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள் தொழில்துறை புரவலர்கள், ஆட்சேர்ப்பு செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  ஆகிய அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் முழு மனதுடன் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.

    ×