search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon competition"

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறை:

    நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்துகொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து, பள்ளிதாளாளர் பிரிட்டோ, பள்ளி முதல்வர் மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்கக் கூடாது, சாலை விதிகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியத்துடன் இணைந்து இன்று புதுவை கடற்கரைச் சாலையில் மினி மராத்தான் போட்டியை நடத்தியது.
    • இப்போட்டியினை, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியத்துடன் இணைந்து இன்று புதுவை கடற்கரைச் சாலையில் மினி மராத்தான் போட்டியை நடத்தியது.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் அருகில் தொடங்கி நகரைச் சுற்றி 4 கி.மீ. தூரம் வரை இப்போட்டி நடைபெற்றது.

    255 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இப்போட்டியினை, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் போது இந்திய சுற்றுலாத் துறை தெற்கு பிராந்திய இயக்குநர்முகமது பாரூக் உடனிருந்தார்.

    • அகாடமி நிர்வாக இயக்குனர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்ட அளவிலான விவேகானந்தர் மராத்தான் -2022 என்னும் மராத்தான் போட்டி அவிநாசி, பழங்கரை, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இன்று காலை நடைபெற்றது.

    தொடக்க நிகழ்ச்சியில் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், விவேகானந்தரின் 120 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 21 கிலோமீட்டர் தூரம் அரை மராத்தானும், ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 10 கிலோமீட்டர் தூரம் மராத்தானும், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோமீட்டர், 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோமீட்டர் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 10 கிலோமீட்டர், அதேபோல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 5 கிலோமீட்டர், 12 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 2 கிலோமீட்டர் என 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது என்றனர்.

    போட்டியை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது. மராத்தான் போட்டியானது எஸ்.கே.எல். பள்ளியில் தொடங்கி பெரியாயிபாளையம் வழியாக பூண்டி ரிங் ரோட்டில் சென்று ஏ.வி.பி பள்ளி, காளம்பாளையம் வழியாக மீண்டும் எஸ்.கே.எல் பள்ளியை வந்தடைந்தது.

    ராமநாதபுரம் நகரில் வருகிற 29-ந்தேதி தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவையை அடிப்படையாக கொண்டு கடந்த 15-ந்தேதி முதல் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராமநாதபுரம் நகரில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.

    35 வயதிற்குட்பட்டவர்கள், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 7.30 மணிக்கு தொடங்கி பட்டணம் காத்தான் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நிறைவடையும்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் 27, 28 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்திலும், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் 80983 87791, 97865 08157, 97902 04497 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×