search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai textile robbery"

    மதுரை ஜவுளிக்கடையில் புகுந்து 80 சட்டைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    மதுரை:

    மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் செய்யது முகமது (வயது 37). இவர் மகால் 1-வது தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் செய்யது முகமது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த விலை உயர்ந்த 80 ரெடிமேட் சட்டைகளை திருடிக்கொண்டு தப்பினர்.

    மறுநாள் காலையில் கடை திறக்க வந்த செய்யது முகமது ‌ஷட்டர் உடைக்கப்பட்டு சட்டைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதுவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு போன சட்டைகளின் மதிப்பு ரூ. 15 ஆயிரம் ஆகும்.

    ×