search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M. K. Stallion's birthday"

    • கட்சி கொடியேற்றப்பட்டு ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்படியும் ,தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி ஆலோசனைப்படியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுல்தான்பேட்டை தம்பணன் முன்னிலையில் கட்சி கொடியேற்றப்பட்டு ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தி.மு.க. கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், திருப்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் மா.சிவசாமி , ஹைடெக் ரவிச்சந்திரன், சுல்தான்பேட்டை கிளை பிரதிநிதிகள் எஸ்.பி.தனபால், எஸ்.ஏ.திருமூர்த்தி,சுல்தான்பேட்டை கிளை துணைச்செயலாளர் சுரேஷ்,

    சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி கிளை செயலாளர் எஸ்.கிட்டான், திருப்பூர் தெற்கு ஒன்றிய சிறுபான்மைபிரிவு ஒன்றிய அமைப்பாளர் முஜிபுர்ரகுமான், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முபாரக்ராஜா , மங்கலம் கிளை செயலாளர் ஷேக் முஜிபுர்ரகுமான், திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் சர்புதீன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாதுரை, சவுந்திரராஜன் ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ஜோதிபாசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×