search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "License to sell"

    • இதர பி.எஸ்.என்.எல்.சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு வருகிற 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
    • விநியோகஸ்தராக 3 ஆண்டுகள் அனுபவமுள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பி.எஸ்.என்.எல்.சேவைகள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற வருகிற 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கோவை வணிகப்பகுதி முதன்மை பொது மேலாளா் வி.சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைதொடா்பு வட்டத்தில் கோவை வா்த்தக பகுதிக்கு உள்பட்ட திருப்பூா் பகுதியில் சிம்காா்டு, ரீசாா்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்.சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு வருகிற 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். டெலிகாம், எப்எம்சிஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அல்லது வேறு ஏதேனும் தயாரிப்புகளின் விநியோகஸ்தா் மற்றும் விநியோகஸ்தராக 3 ஆண்டுகள் அனுபவமுள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89034-18128 என்ற எண்ணிலோ இணையதளத்தைப் பாா்வையிட்டோ தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலமாக மண்வளம் மேம்படுகிறது. உரத்தேவையையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம்.
    • கடை அறிவிப்பு பலகையில் உர இருப்பு விவரங்களை விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடப்படுகிறது. நடப்பு பருவத்தில் செப்டம்பர் மாதத்திற்கு தேவையான யூரியா உரம் 250 டன் தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரப்பெற்றுள்ள உரங்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் யூரியா உரம் 1,872 டன்னும், டி.ஏ.பி. உரம் 1,201 டன்னும், பொட்டாஷ் உரம் 932 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4,633 டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 602 டன்னும் போதியளவு இருப்பில் உள்ளது.

    அவினாசி வட்டாரத்தில் உயிர் உர உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அனைத்து பயிர்களுக்கும் தேவையான உரம் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலமாக மண்வளம் மேம்படுகிறது. உரத்தேவையையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம்.

    உரங்களை விற்பனை முனை எந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பும் உரங்களை விற்பனையாளர்கள் கொடுக்க வேண்டும். வற்புறுத்தி கூடுதலாக உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிய விலைக்கு உரங்களை விற்பனை செய்வது அவசியம். கடை அறிவிப்பு பலகையில் உர இருப்பு விவரங்களை விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.

    உரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் உரக்கட்டுபாட்டு விதிகளின் படி உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரக்கடைகளில் தங்கள் ஆதார் எண்ணை கொடுத்து விற்பனை முனை எந்திரம் மூலமாக வழங்கப்படும் ரசீதில் உள்ள விலையை செலுத்தி ரசாயன உரங்களை வாங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×