search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laththi"

    • வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.


    லத்தி

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார்.

    இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வந்த நிலையில் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    • விஷால் நடிக்கும் 'லத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.
    • லத்தி படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார்.

    விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'லத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போன்று படமாக்கப்பட்டது. அப்போழுது எதிர்பாராத விதமாக விஷால் காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து அவர் கீழே விழுந்தார்.

    லத்தி - விஷால்

    லத்தி - விஷால்

    இதனால், எழுந்து நிற்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட விஷாலுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, பின்னர் விஷாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்தனர். தற்போது விஷாலுக்கு தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்பில் விஷால் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு கையில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

    ×