search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovilpatti women dharna"

    தன்னையும் தனது குழந்தைகளையும் கணவர் வீட்டிற்குள் அனுமதிக்க கோரியும், தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கீதா தனது 2 மகன்களுடன் மாமனார் ராஜகோபால் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் காமாட்சிராஜன் (வயது 41). இவருக்கு கீதா (38) என்ற மனைவியும், ஸ்ரீ ஜெயசூர்யா (15), ஸ்ரீஅரவிந்த கார்த்திக் (13) என்ற 2 மகன்களும் உள்ளனர். காமாட்சிராஜன் தனது தந்தை ராஜகோபாலுடன் சேர்ந்து பழக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் பழக்கடையை ராஜகோபால், அவரது மருமகனுடன் சேர்ந்து விற்க முயன்றதாகவும், அதனை காமாட்சி ராஜன் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முத்துராஜூ, காமாட்சிராஜனை அவதூறாக பேசி உள்ளார். இதில் மனமுடைந்த காமாட்சி ராஜன் கடந்த 1-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கீதா கொடுத்த புகாரின் பேரில் காமாட்சிராஜனை தற்கொலைக்கு தூண்டியதாக முத்துராஜ் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய முத்துராஜை கைது செய்ய கோரியும், தன்னையும் தனது குழந்தைகளையும் கணவர் வீட்டிற்குள் அனுமதிக்க கோரியும், தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கீதா தனது 2 மகன்களுடன் மாமனார் ராஜகோபால் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ராஜ கோபால் மற்றும் கீதா ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது குடும்ப செலவுக்கு ரூ .10 ஆயிரம் முதல்கட்டமாக கொடுப்பதாகவும், பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கீதா தனது போராட்டத்தை கைவிட்டு சென்றார். 


    ×