search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollemcode thookam festival"

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழாவில் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தேவி கோவில்களில் குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவி லும் ஒன்று. இந்த கோவி லில் ஆண்டு தோறும் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி தொடங்கியது. கோவில் தந்திரி பிரம்ம கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி யது. தூக்க நேர்ச்சை தொடங்குவதற்கு முன்னதாக தூக்ககாரர்களின் முட்டுகுத்தி நமஸ் காரம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 1,691 குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரை நடக்கிறது.

    தூக்ககாரர்கள் நேர்ச்சை குழந்தைகளை தூக்க தேரில் தூக்கி கோவிலை ஒருமுறை சுற்றி வந்து வேண்டுதலை முடித்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவசங்கள் அணியப்பட்டு இருந்தன.

    தூக்க விழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    ×