search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodukkudi river Occupied"

    போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பால் பல குளங்களுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள குரங்கணி, டாப் ஸ்டேசன் மற்றும் கேரள பகுதிகளில் பெய்யும் மழை நீர் கொட்டக்குடி ஆற்றில் வந்து சேர்கிறது. வருடத்தின் பல மாதங்கள் மழைப் பொழிவு உள்ள இடம் என்பதால் இதனை சுற்றி அதிக அளவு பணபயிர்கள் மற்றும் தென்னை, வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

    கொட்டக்குடி ஆற்றில் இருந்து தண்ணீர் வைகை அணை செல்லும் வரை 120 அடி வரை அகலத்துக்கு பாதை இருந்தது. ஆனால் தற்போது நீர் செல்லும் பாதை கடுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் இப்பகுதியை பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அதன்படி 4 சர்வேயர்கள் மற்றும் தாசில்தார் தலைமையில் நில அளவீடு செய்யப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

    ஆறு செல்லும் பாதையில் உள்ள குளங்களுக்கு கடந்த பல மாதங்களாகவே தண்ணீர் வருவதில்லை. இது தவிர தண்ணீர் வரும் வழித்தடத்தில் கிணறுகள் அமைத்து உறிஞ்சப்படுகிறது.

    இதனால் இப்பகுதியில் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மீண்டும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆறு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×