search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur Coconut pulses"

    கரூர் அருகே தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர்.

    இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து அருகாமையில் உள்ள சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாரத்தில் திங்கட்கிழமைகளில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். ஏலம் எடுக்க தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.10,700-க்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.9 ஆயிரத்து 800-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×