search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Centenary"

    • சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
    • புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்திர காந்தி சதுக்கம் தொடங்கி வில்லியனூர் வரை புதுவை-விழுப்பு சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஆணை வெளியிட வேண்டும்.

    புதுவை அரசு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். வில்லியனூரில் கருணாநிதிக்கு சிலை அமைத்து நினைவு ஆய்வு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருணாநிதி குறித்து பேச்சு-கட்டுரை போட்டிகள் அரசின் சார்பில் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி.மு.க செயற்குழு கூட்டம்
    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நூற்றாண்டு விழா

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    முன்னாள் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அண்ணா, பெரியார், கலைஞர் எண்ணங்களை நிறைவேற்றுகிற முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    நூற்றாண்டு விழாவை ஓராண்டிற்கு கொண்டாட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் ஜூன் 3ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். இதுவரை ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 3-ந்் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து நகராட்சிகளில் உள்ள வார்டுகளிலும் அனைத்து கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்க வேண்டும்.

    சாதனை விளக்க கூட்டம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 இடங்களில் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இளைஞர் அணி சார்பில் 51 இடங்களில் 31-ந் தேதி வரை தெருமுனை பிரச்சாரங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா வேறு எங்கும் நடக்காத அளவிற்கு சிறப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    ×