search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadri park"

    குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் முதல் சீசனையொட்டி 1½ லட்சம் மலர் நாற்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்கள் அதிக அளவு உள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். குன்னூரை பொறுத்தமட்டில் சுற்றுலா தளங்களாக சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லேம் ஸ்ராக்டால்பின் நோஸ் போன்றவை உள்ளன.

    குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா உள்ளது. இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நிலவும் முதல் சீசனுக்கு 1½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டேலியா, சால் வியா, பெட்டோனியா பிளாக்ஸ் போன்ற 17 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    மேற்கண்ட மலர் நாற்றுகளுக்கான விதைகள் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வரவழைக்கப்பட்டு விதைக்கப்பட்டுள்ளன. தற்போது மலர்நாற்றுகளை நடவு செய்யும் பணிக்காக தொட்டிகள் மற்றும் பாத்திகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் மலர் நாற்று நடவு பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×