search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judge advises"

    • மத்திய,மாநில மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாணவமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர்மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு சார்பில்,கெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பள்ளி தலைமைஆசிரியர் சிவகாமி வரவேற்றுபேசினார். வட்டார கல்விஅலுவலர் ஜஸ்டின் ராஜ்வாழ்த்தி பேசினார். சிறப்புவிருந்தினராக நீதித்துறை நடுவர் (விரைவு நீதிமன்றம்) ரஞ்சித்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் மத்திய,மாநில மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் அதிகாரங்கள் மற்றும்அவற்றின் செயல்பாடுகள் பற்றி மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் கைபேசியின் மூலம் நிகழும் நன்மை தீமைகள் பற்றியும் அதனை மாணவர்கள்தங்களுக்கு பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்என்றும் தங்களது இளமை பருவத்தை கைபேசியில்தொலைத்துவிடாமல் நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம்செலுத்த வேண்டும்என்று கூறினார்.

    இறுதியாக ஆசிரியைஸ்ரீதேவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×