search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israeli army operation in Gaza triggers sharp escalation violence"

    பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசியது. #PalestianianRocketFire #Isreal

    ஜெருசலம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அதில் பல ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது.

    அதில் பலர் காயம் அடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.

    இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ பயங்கரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா  மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது.

    விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காசா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது.

    இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2  பயங்கரவாதிகள் இறந்ததாக மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இத்தாக்குதல் காரணமாக காசா  மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காசாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாரீஸ் சென்ற இஸ்ரேல் பிரதமர் தனது நிகழ்ச்சிகளை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். #PalestianianRocketFire #Isreal

    ×