search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International certification for Krishna College of Arts and Sciences"

    கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்டர்செட் பன்னாட்டு சான்று நிறுவனம் இச்சான்றிதழை வழங்கியது. நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.பெருமாள் தலைமையேற்றார்.  கல்லூரியின் தலைவர், மாவட்ட கவுன்சிலர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைக்கல்லூரி முதல்வர், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்  ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். 

    பெங்களுரு குளோபல் குவாலிட்டி சிஸ்டம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அனில் பட்டேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சர்வதேச தரச்சான்றிதழை வழங்கினார். 
    அவர் பேசியதாவது, கல்லூரியின் பாடத்திட்ட நடைமுறை, ஆய்வக வசதி, நூலகம், உட்கட்டமைப்பு வசதிகள், அனைத்திலும் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்நிறுவனம் தரச்சான்று வழங்கியது என்றார். 

    தாளாளர் தனது தலைமையுரையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே சர்வதேச தரச்சான்று பெரும் முதல் கல்லூரி கிருஷ்ணா கல்லூரி ஆகும். ஒழுக்கம், கல்வி, நல்ல நடைமுறை, பல்கலைக்கழகம் மற்றும் அரசு வழிகாட்டும் விதிமுறைகளில் சமரசம் செய்யாமல் கல்லூரி நடைபெறுவதால் கிடைத்த பரிசுதான் இந்த சர்வதேச தரச்சான்றிதழ்.

    இதற்கு ஒத்துழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பேசினார்.  பெரியார் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார். 
    இவ்விழாவில் மாணவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    ×