search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Boxing Tournament"

    • மகாராஷ்டிர மாநிலம் பஞ்ச்கனியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பியுள்ளாா்.
    • திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், பிரசாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சிரபுஞ்சி நகரில் வசித்து வரும் துரைசாமி, நா்மதா தம்பதியின் மகன் பிரசாந்த். இவா் சின்னக்கரையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளாா்.

    உஸ்பெகிஸ்தானில் வரும் செப்டம்பா் 13 முதல் 17 வரை 5 நாட்கள் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் பஞ்ச்கனியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பியுள்ளாா்.

    இளம் குத்துச்சண்டை வீரா் பிரசாந்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், பிரசாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

    அதே போல கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம் பிரசாந்துக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சா்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான விமான கட்டணம் உள்ளிட்ட பயண செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து இளம் குத்துச்சண்டை வீரா் பிரசாந்த் கூறுகையில், சா்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவது மிகவும் பெருமையாக உள்ளது. போட்டிகளில் வெற்றி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.

    ×