search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax raids"

    விவி மினரல்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #VVMinerals #ITRaids
    சென்னை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாக கொண்டு விவி மினரல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் கடற்கரையில் உள்ள கனிமங்கள் நிறைந்த மணலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் இந்த நிறுவனம், பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகப் புகார் கூறப்படுகிறது.

    மணல் தொழில் நடத்தும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான இந்த நிறுவன அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



    வைகுண்டராஜனின் வீடு மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி செலுத்தவில்லை என்று புகார் வந்ததை அடுத்து தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன. #VVMinerals #ITRaids

    சத்துணவு திட்டத்திற்கான பொருட்கள் சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். #IncomeTaxRaids #NutritiousMealCompanies
    சென்னை:

    தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன. சத்துணவுத் திட்ட பொருட்களை சப்ளை செய்யும் 2 தனியார் நிறுவனங்கள், அனைத்து பகுதிகளிலும் கிளைகளை அமைத்து அந்தந்த பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றன.

    இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனையைத் தொடங்கினர். சென்னை, கோவை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனித்தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கர்நாடக மாநிலத்தில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. மொத்தம் 70 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிறுவனங்கள் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IncomeTaxRaids #NutritiousMealCompanies

    ×