search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax commissioner"

    நடப்பு ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு மண்டல முதன்மை தலைமை வருமானவரி கமி‌ஷனர் எல்.சி.ஜோஷி ரானே கூறினார். #Incometax
    புதுடெல்லி:

    வருமானவரி துறையின் கிழக்கு மண்டல அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. அதில் மத்திய வரிவிதிப்பு வாரிய உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி கலந்து கொண்டு பேசினார்.

    ‘‘நடப்பு ஆண்டில் (2017-18) 6 கோடியே 92 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 1 கோடியே 31 லட்சம் பேர் கூடுதலாக தாக்கல் செய்துள்ளனர்.

    கடந்த ஆண்டு (2016-17) 5 கோடியே 61 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து இருந்தனர். நடப்பு ஆண்டில் (2017-18) 1 கோடியே 6 லட்சம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்து இருக்கிறார்கள். வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார்.

    வடகிழக்கு மண்டல முதன்மை தலைமை வருமானவரி கமி‌ஷனர் எல்.சி.ஜோஷி ரானே பேசினார். அப்போது நடப்பு ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும்.

    வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் ரூ.7,097 கோடி வருமானவரி வசூலாகி உள்ளது. இது 16.7 சதவீதம் அதிகமாகும். இதற்கு முன்பு ரூ.6,082 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.



    2018-19-ம் ஆண்டில் இப்பகுதியில் ரூ.8,357 கோடி வருமானவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.75 சதவீதம் அதிகமாகும் என்றார். #Incometax
    ×