search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Dharmapuri district Counterfeit sales have increased."

    தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    தருமபுரி,

    தமிழகத்தில் மது பானங்களின் விற்பனை விலை அதிகரித்ததால் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கியிருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய விற்பனை குறித்து குற்றச்சாட்டுகள் வைத்தார். 

    இதையடுத்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

    இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:- தருமபுரி, கிருஷ்ண கிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்த போது கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது. இதனால் பல உயிர்கள் பலியானது. இதையடுத்து போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கடி வாளம் போட்டனர். 

    ஆனால் தற்போது மீண்டும் தருமபுரியில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கியுள்ளது. குறிப்பாக  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோட்டப்பட்டி பகுதியில் கள்ளச்சாராய வியாபாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

     ஆனாலும் ஒரு சில போலீசாரின் ஆசியுடன் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  மேலும் இதற்கு மாவட்ட எஸ்.பி. கலைசெல்வன் தனி கவனம் செலுத்தி கள்ளச்சாராய விற்பனை க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    ×