என் மலர்

  நீங்கள் தேடியது "Hyena Escaped"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலியை அதிகாரிகள் தீவிர முயற்சிக்குப் பிறகு பிடித்தனர். #HyenaEscaped #VandalurZoo
  சென்னை:

  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 4 கோடிட்ட கழுதைப்புலிகளில் ஒன்று நேற்று திடீரென காணாமல் போய்விட்டது. மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த புலி நேற்று மாலை மாயமானது. அதை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

  பூங்கா வளாகத்தை விட்டு கழுதைப்புலி வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் செவ்வாய்க்கிழமை காலைக்குள் பிடித்துவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். எனினும் பூங்காவை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

  இந்நிலையில், தீவிர முயற்சிக்குப் பிறகு, பூங்கா வளாகத்தில் சுற்றித்திரிந்த கழுதைப்புலியை அதிகாரிகள் இன்று காலை பிடித்து கூண்டில் அடைத்தனர். #HyenaEscaped #VandalurZoo
  ×