search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hogenakkal"

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.
    • கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

    மேலும் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.

    இங்கு வெளிமாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை ரசித்தும், தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.

    மேலும் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.

    இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.

    தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.

    தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.

    400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.

    தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.
    • ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    பென்னாகரம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறையின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, முதலை பண்ணை காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாகஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
    • நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பிலும் குறைவு விதமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    நேற்று பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • மழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6, 500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம் பாளையம், பில்லிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6, 500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்தை அதிகாரிகள் கண்காணித்து செய்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
    • கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த இரண்டு மாதமாக 500 கன அடி முதல் 1000 வரை மாறி மாறி குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்தன. இந்த நிலையில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிண்டுலுவில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    கோடை விடுமுறை என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும், மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் பெய்த கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு 2,200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 103.55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.54 அடியாக சரிந்தது.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநில காவிரி மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
    • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
    • இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.

    இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×