search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hogenakkal water inflow decrease"

    ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்த நீர்வத்து இன்று 12,200 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    தருமபுரி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டரம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று காலை 6,400 கன அடியாக இருந்த நீர்வரத்து மழையின் காரணமாக படிபடியாக அதிகரித்து நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 12 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று மதியம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் திடீரென்று ஒகேனக்கல்லுக்கு வந்து ஆய்வு செய்தனர். 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தபோது மெயின் அருவி, காவிரி கரையோர பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்தது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஒகேனக்கல் பகுதிகளில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களிலும், நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆலோசனை நடத்தினர். #Hogenakkal

    ×