search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey series"

    • 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் ஜுலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.
    • தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்க உள்ளன.

    டெல்லி:

    ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி தொடர் நடத்துகிறது. அந்த தொடருக்கு இந்திய அணியையும் தேர்வு செய்து உள்ளது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்க உள்ளன.

    4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் ஜுலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை ஹாக்கிக்கு முன்பாக இந்திய அணி விளையாட போகும் தொடர் என்பதால் இந்திய அணியினர் வெற்றி பெற ஆர்வமாக உள்ளனர். இந்த தொடருக்கான 24 பேர் கொண்ட அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

    இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக ஹர்டிக் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். அணித்தேர்வு குறித்து இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிர்சியாளர் கிரேக் புல்டன் கூறுகையில், "மிகவும் கவனமுடன் அணியைத் தேர்வு செய்து உள்ளோம். போதிய அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரிசம கலவையில் உள்ள வகையில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் ஆசிய கோப்பைக்கு முன்பாக அணியின் வலிமை மற்றும் வீரர்களின் தனித்திறமைகளை கண்டறிய உதவும்''என்று கூறினார்.

    இந்திய அணி பின்வருமாறு:-

    ஹர்மன்ப்ரீத் சிங்,ஹர்டிக் சிங், ஸ்ரீ ராஜேஷ் பரட்டு,கிருஷ்னன் பகதூர் பதாக்,ஜர்மன்ப்ரீத் சிங்,நிலாம் சஞ்சிப்,மன்ப்ரீத் சிங்,அமித் ரோஹிதாஸ்,வருன்,சஞ்சய்,விவேக் சாகர்,சுமித்,நீலகண்ட சர்மா,சம்ஷேர் சிங்,ராஜ்குமார் பால்,லலித் குமார்,மந்தீப் சிங்,குர்ஜத் சிங்,சுக்ஜித் சிங்,அபிஷேக்,பவன்,தில்ப்ரீத் சிங்,சிம்ரன்ஜீத் சிங் மற்றும் கார்த்தி செல்வம்.

    ×