search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heritage"

    ரெயில்வேயில் பணியாற்றி 65 வயது மிகாதவர்களை பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்வேயில் பணியாற்றி 65 வயது மிகாதவர்களை பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    நீராவி என்ஜின்கள், பாரம்பரிய ரெயில் பெட்டிகள், நீராவி கிரேன்கள், நிலைய உபகரணங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும், புதுப்பிக்கவும் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.1,200 ஆகும்.

    இதுபற்றி மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த பணியில் அமர்த்தப்படுகிற ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வேயின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், பழுதுகளை சரி பார்க்கவும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு அவர்கள் பயிற்சியாளர்களாகவும் திகழ வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரெயில்வே வாரியம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது. 
    ×