search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka seized"

    கோவை மாவட்டத்தில் குடோனில் பதுக்கி வைத்த 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி சோமனூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் விஜேந்திரகுமார் (வயது 38) என்பவர் குடோன் வாடகைக்கு எடுத்து தின்பண்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து இருந்தார்.

    இந்த குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களையும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தின்பண்டங்களுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    குடோனின் இருந்து 1 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 7 லட்சம். பின்னர் அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் குடோன்களில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 10-க்கும் மேற்பட்ட குடோன்களுக்கு சீல் வைத்துள்ளோம்.

    மாநகர பகுதிகளில் நாங்கள் சோதனை செய்வதை அறிந்த வியாபாரிகள் தற்போது புறநகர் பகுதிகளில் குடோன்கள் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது முதற்கட்டமாக வந்த தகவலையடுத்து எம்.ஜி.ஆர். நகரில் சோதனை நடத்தி 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து புறநகர் பகுதிகளில் கண்காணித்து சோதனை நடத்த உள்ளோம்.
    சேலம் அருகே அதிரடி சோதனையில் ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 18 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கருப்பூர்:

    பெங்களுரில் இருந்த கோவைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு செந்தில்நாதனுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், தலைமை காவலர் பாலதண்டாயுதம் ஆகியோர் கருப்பூர் சோதனை சாவடிக்கு சென்று அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது பெங்களுரில் இருந்து கோவைக்கு இரண்டு ஆம்னி பஸ்கள் வந்தது. பஸ்சை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பஸ்சில் 6 மூட்டைகளும், மற்றொரு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பஸ் டிரைவர்களையும் பயணிகளை இறக்கி விட்டு, விட்டு காலையில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பறிமுதல் செய்யபட்ட குட்கா மூட்டைகளை சூரமங்கலம் போலீசில் நிலையத்தில் வைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    ×