search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Secretariat"

    குஜராத் மாநிலத்தின் தலைமை செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று சுற்றிவளைத்துப் பிடித்தனர். #Leopardcaptured #GujaratSecretariat #LeopardinGujaratSecretariat
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், காந்திநகர் பகுதியில் அம்மாநில அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட்டின்கீழ் உடலை வளைத்து இன்று அதிகாலை ஒரு சிறுத்தை நுழையும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.

    இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவந்த நிலையில், தலைமை செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தையை தேடும் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளும், காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.


    இந்நிலையில், இன்று பிற்பகல் அந்த சிறுத்தையை சுற்றிவளைத்துப் பிடித்தனர். சிறுத்தை பிடிபட்டதை தொடர்ந்து பீதியில் இருந்த தலைமை செயலக அதிகாரிகளும், அலுவலர்களும் நிம்மதி அடைந்தனர்.  #Leopardcaptured #GujaratSecretariat  #LeopardinGujaratSecretariat
    ×