search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Multipurpose Hospital"

    சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் ரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார்.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் ரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கிய 50 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்துள்ளனர். இதில் 4 பேருக்கு இதய நோய்கள் இருப்பதும், 17 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில், 9 நிமிடத்தில் 12 ரத்த மாதிரிகளை கண்டறிய அதிநவீன கருவி வாங்கப்பட்டுள்ளது.

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அம்மா ஆரோக்கிய திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதன் மூலம் 41 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

    பின்னர் முழு உடல் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட பழனியை சேர்ந்த கயல்விழி (வயது 43) என்பவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ டாக்டர் நாராயணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். 
    ×