search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa Lifts Ban On Fish"

    வெளிமாநில மீன்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை கோவா மாநில அரசு நீக்கியதைத் தொடர்ந்து மீன்கள் வரத் தொடங்கின. #Formalinfish
    பனாஜி:

    பார்மலின் அச்சம் காரணமாக கோவா அரசு வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருந்தது. பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்ற ரசாயனம் உள்ளதாக கோவாவின் உணவு மற்றும் மருந்து கழகம் கூறியதைடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை இறுதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவாவிற்கு வெளியே இருந்து மீன்களை ஏற்றி கொண்டு வரும் லாரிகள் எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை.  

    இந்நிலையில், வெளிமாநில மீன்கள் இறக்குமதி மீதான தடையை கோவா அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து மீன் லாரிகள் வரத் தொடங்கி உள்ளன. ஆனால், ரசாயன கலப்பு இல்லாத மீன்கள் இறக்குமதி செய்வதை உறுதி செய்யும் வகையில் மாநில எல்லைகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் வல்லுநர் குழுவினர், மாநில எல்லைகள் வழியாக மீன் ஏற்றி வரும் லாரிகளை சோதனை செய்கின்றனர்.  

    லாரிகளில் வரும் மீன்களின் மாதிரியை எடுத்து அதில் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறதா? என ஆய்வு செய்கின்றனர். இதுவரை எந்த ரசாயனமும் கண்டறியப்படவில்லை என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்தார்.  #Formalinfish 
    ×