search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA2018"

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்பே வங்காள தேசத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. #worldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நாளை ரஷியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி, போர்ச்சுக்கல் அணி கேப்டன கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணி கேப்டன் நெய்மர் ஆகியோருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    தற்போது தாங்கள் வசிக்கும் தெருக்களில் தங்களுடைய பிடித்த வீரர்கள் விளையாடும் அணிகளின் கொடியுடன் ரசிகர்கள் உலா வருகின்றனர்.

    கொல்கத்தாவில் மெஸ்சியின் தீவிர ரசிகரான டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா ஜெர்சியின் கலரை வண்ணமாக அடித்திருந்தார்.

    உலகக் கோப்பை கால்பந்து ஜூரம் வங்காள தேசத்தையும் விட்டுவைக்கவில்லை. சுமார் 16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள தேசம், உலகக் கோப்பை பிபா தரவரிசையில் 211 அணிகளில் 194-வது இடத்தில் உள்ளது. என்றாலும் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    கடந்த வாரம் முக்கிய நகரான பந்தரில் மெஸ்சி, நெய்மர் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயம் அடைந்தார். சாலையில் கொடியை ஏந்திச் செல்லும்போது 12 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.



    அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டு கொடியுடன் ரசிகர்கள் சாலையில் அணிவகுத்து செல்கிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு கொடிகளுடன் அணிவகுத்துச் செல்லக்கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வழக்கறிஞர் ஒருவர் உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடிகளை பறக்க விடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கிடையே பரிசால் யுனிவர்சிட்டில், வளாகத்திற்குள் வெளிநாட்டு கொடிகளை பறக்கவிட தடைவிதித்துள்ளது.
    ×