search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers expectation"

    • தேனி, திண்டுக்கல் மாவட்ட த்துக்கு ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல் மாவட்ட த்துக்கு ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் பொதும க்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் சிறுமலையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. வைகை அணை 70.01 அடியை எட்டியு ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைக்கு 2406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2656 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. நேற்று முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 138 கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது. இதே போல் சோத்துப்பாறை அணை 126.60 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 222 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.15 அடியாக உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு 2831 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1866 கன அடி நீர் திறக்கப்ப டுகிறது.

    152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் அதற்கும் கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டை களை போட்டு வருகிறது. மேலும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிலர் முல்லைப்பெரியாறு அணை குறித்து வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

    அணை பகுதியை ஆய்வு செய்த ஐவர் குழுவினர் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர். இருந்த போதும் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    பெரியாறு 39.2, தேக்கடி 39.6, கூடலூர் 3, உத்தம பாளையம் 4.4, வீரபாண்டி 4, வைகை அணை 2.2, மஞ்சளாறு 6, சோத்துப்பாறை 4, ஆண்டிபட்டி 1.8, அரண்மனைபுதூர் 2.2, போடி 5.2, பெரியகுளம் 5 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர் மின் நிலை யத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ×