search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family help fund"

    பல்வேறு சம்பவங்களில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், ரஞ்சித். நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரவேலன், பிரேம்குமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

    சென்னை நந்தனம் குடியிருப்பில் வசித்து வந்த மாரி மனைவி கிருஷ்ணம்மாள் பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம், எம்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு ஆகியோர் வைகை ஆற்றின் நிலையூர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

    மதுரை மாவட்டம், கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த மார்நாடு வீட்டின் அருகிலுள்ள தெப்பகுளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்பன் மனைவி ரங்குத்தாய் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி தாக்கி உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், மூடுதுறை கிராமத்தைச் சேர்ந்த கிருத்திக்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், காளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) உதயகுமாரின் மனைவி மீனாட்சி. அதே கிராமத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர் மண் சரிவினால் உயிரிழந்தார்கள்.

    ஈரோடு மாவட்டம், ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொன்னுசாமி மலைத்தேனீக்கள் தாக்கியதில் உயிரிழந்தார்கள்.

    திருப்பூர் மாவட்டம், தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    ×