search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exercises"

    இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.
    ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.

    செய்முறை :

    1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.

    2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.

    3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.

    4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.

    5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.

    6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.

    - இவை அனைத்தும் எவ்வாறு என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் சிறுநீர் கழிக்கும்போது அதனை நிறுத்தி பின் விட்டும் பின் நிறுத்தியும் பின் விட்டும் செய்யலாம்.

    பலன்கள் :

    சிறுநீர் கசிதல் மற்றும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும். இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. இடுப்பெலும்பு-சுற்றுப்புற அங்கங்களுக்கு, பலம் தரும் அருமையான பயிற்சி இது! கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக மிகவும் உதவும். தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.
    இந்த ஸ்விஸ் பந்து பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு தண்டு வலிமை அடையும். இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
    தொப்பையை குறைக்க நிறைய பயிற்சிகள் வந்தாலும் ஒரு சில பயிற்சிகள் தான் நல்ல பலனை தருகின்றன. அவைகளில் மிக முக்கியமானது ஸ்விஸ் பந்து பயிற்சி. இந்த பயிற்சியை செய்வது மிகவும் எளிமையானது.

    இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பது உறுதி..இந்த பயிற்சி செய்ய முதலில் சுவற்றிற்கும் உங்களுக்கும் இடையே 2 அடி இடைவெளி இருக்கும் படி பின்புறமாக படத்தில் உள்ளபடி திரும்பி நிற்கவும்.

    ஸ்விஸ் பந்தை உங்கள் முதுகு பக்கத்திற்கும், சுவற்றிற்கும் இடையே வைத்து கொள்ளவும். முதுகிற்கும், சுவற்றிற்கும் ஸ்விஸ் பந்து பேலன்சாக இருக்கும் படிசெய்யவும். இப்போது மெதுவாக கீழே இறங்கி சேரில் அமருவது போல் ஸ்விஸ் பந்துக்கு இணையாக அமர வேண்டும்.

    பின்னர் அதே போல் ஸ்விஸ் பந்தை மேலே உருட்டிய படி நிற்கவும். படத்தில் உள்ளபடி ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து எழ வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக 25 முதல் 30 முறை செய்யலாம்.

    இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதை படிப்படியாக குறைந்திருப்பதை பார்க்கலாம். இந்த பயிற்சி செய்வதால் முதுகு தண்டு வலிமை அடையும்.
    சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

    தினமும் தோப்புகரணம் போட்டுவந்தால் நல்ல பலனை காணலாம். தோப்பு கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுக்கும். கீழே உள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் பின்பக்க கொழுப்பை குறைக்கலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும்.

    முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானை போல்) நிற்க வேண்டும். தலை தரையைப் பார்த்தபடி இருக்கட்டும். இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர், இதேபோல இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும். இது தான் ஒரு செட், இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.

    பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பின்பக்கம் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்திலிருந்தே படிப்படியாக வித்தியாசம் தெரிவதை காணலாம்.

    பலன்கள்

    பின்பக்கக் கொழுப்பு குறைந்து, குளூட்டியஸ் (Gluteus) எனப்படும் பின்பக்கத் தசைகள் வலுவடையும்.
    கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
    மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அது உண்மையே. இருப்பினும் கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

    பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேப் போல் கோடையில் சாதாரணமாக வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால், அதனால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கோடையில் ஜிம் செல்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து நன்மைப் பெறுங்கள்.

    கோடையில் ஜிம் செல்பவர்கள், இதுவரை குடித்து வந்த நீரின் அளவை விட சற்று அதிகமாகவே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடல் வறட்சி அடைந்துவிடும். ஆகவே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவு நீரைக் குடியுங்கள். எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். எனவே கோடையில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்தும், அடிக்கடி இளநீரையும் குடிக்க வேண்டும். கோடையில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.

    காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுப்பது மிகவும் நல்லது. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. எளிய உடற்பயிற்சிகள் கோடையில் கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதைத் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகளை அளவாக மேற்கொள்வதே புத்திசாலித்தனம். தளர்வான உடைகள் குறிப்பாக கோடையில் உடலுக்கு போதிய காற்றோட்டம் கிடைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான சற்று ஸ்டைலான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடற்பயிற்சியை செய்து முடிக்கும் வரை உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

    இடைவெளிகள் எடுக்கவும் கோடையில் 1 மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த ஒரு மணிநேரத்திலேயே சிறு இடைவெளிகளை அவ்வப்போது எடுக்க வேண்டும். அப்படி இடைவெளியின் போது நீரையும் பருக வேண்டும்.
    இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.
    வரும்முன் காத்தலே சிறந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் உடல்நல விஷயத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்தான் உடலை கவனிக்கிறோம். மூட்டுகளின் ஆரோக்கியத்திலும் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். மூட்டுவலி வந்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிற வரை அதைக் கண்டுகொள்வதில்லை.ஆனால், இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

    எங்கேயாவது அடிபட்டு மூட்டுகளில் காயம் ஏற்படும்போது அது தீவிரமான பாதிப்பைக் கொடுப்பதையும் தவிர்க்கலாம். மூட்டுகளைப் பலப்படுத்தும் பயிற்சிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். இந்தப் பயிற்சிகளை வெறும் படங்களைப் பார்த்து நீங்களாக செய்ய வேண்டாம். மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் செய்வதுதான் பாதுகாப்பானது.

    * ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)

    தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.



    * ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)

    தரைவிரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.

    * வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)

    சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.

    உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும்.
    புத்தம் புதிய அகுவா ஏரோபிக்ஸ் மூலம் உங்கள் உடலை டோன் செய்து கொள்வதற்கான நேரம் இது. புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு செய்யும் தீவிரமான உடற்பயிற்சி முறை இது. உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும்.

    நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும். புத்துணர்வு அளிக்கும் அம்சம் தவிர, உடல், ஆரோக்கிய பலன்களுக்காகவும் இது புகழ்பெற்றது. நீரானது காற்றைவிட 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், நீங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இயற்கையான ஒரு எதிர்ப்புசக்தி எப்போதும் இருக்கும். இதனால் நீச்சல் குளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவுக்கும் கூடுதல் ஆற்றல் செலவாகும். எடுத்துக்காட்டாக, நீரில் நீங்கள் ஜாகிங் செய்தால், நிமிடத்துக்கு 11 முதல் 12 கலோரிகள் வரை செலவழிப்பீர்கள். ஆனால் ஜிம்மில் ஒரு நிமிடத்துக்கு 8 முதல் 9 கலோரிகள் மட்டுமே செலவாகும்.

    அகுவா ஏரோபிக்ஸ், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரித்து, உடலின் எல்லா முதன்மையான தசைப் பகுதிகளையும் வலுவாக்குகிறது.

    1. அகுவா ஏரோபிக்ஸ் கார்டியோவாஸ்குலர் ஃபிட்னெஸ் வலிமைக்கான பயிற்சிகளில் உதவுகிறது.

    2. நடன அசைவுகளும், சீரான அசைவுகளும் இதில் இருப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

    3. செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதுடன், மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.

    4. நீரின் மிதக்கவைக்கும் தன்மை, உடல் எடையை பெருமளவு குறைப்பதால், மூட்டுகள் மற்றும் தசைகளில் சுமை குறையும்.

    எல்லா வயதினரும் அகுவா ஏரோபிக்ஸை தாராளமாகச் செய்யலாம். ஆனால் கர்ப்பமடைந்த பெண்கள், மூட்டு பிரச்சினைகள் கொண்ட முதியவர்கள், மற்றவர்கள் பார்க்குமாறு ஜிம்மில் பயிற்சி செய்ய தயங்குபவர்கள் போன்றவர்களுக்கு இது ஏற்றது. ஆனாலும் ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பின் செய்வது நல்லது.

    நாற்காலியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடலுக்கு எப்பொழுதும் ஏதாவது சிறு சிறு பயிற்சிகள் அவசியம். கீழ்கண்ட பயிற்சிகள் மிக எளிதானவை, சிறியவை, பெரிதும் உதவுபவை முயற்சிப்போமே.
    நாற்காலியை விட்டு நகரவே முடியலை. அத்தனை வேலை கம்ப்யூட்டரில் எனக்கு என்று சொல்பவர்கள் அதிகம். நாற்காலியில் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிற வேலை அதிகம் என்று சொல்பவர்களும் அதிகம். வீட்டில் காலையில் இருந்து இரவு வரை நாற்காலியை விட்டு சோபாவை விட்டு நகராதவர்களும் ஏராளம்.

    நான் காலை 20 நிமிடங்கள் நடந்துவிட்டேன் இன்றைக்கு இது போதும் என்று இருப்பவர்களும் ஏராளம். உடலுக்கு எப்பொழுதும் ஏதாவது சிறு சிறு பயிற்சிகள் அவசியம். கீழ்கண்ட பயிற்சிகள் மிக எளிதானவை, சிறியவை, பெரிதும் உதவுபவை முயற்சிப்போமே.

    முதல்பயிற்சி: படம் (1)


    படத்தில் உள்ளது போன்ற சமமான நாற்காலியினையே பயன்படுத்துங்கள். முழங்காலினை மடக்கி நீட்டும் பயிற்சி. நாற்காலியின் நுனியில் நிமிர்ந்து அமருங்கள், நுனி என்றவுடன் கீழே விழுவது போல் அமரக்கூடாது. நாற்காலியில் சாய்ந்து அமராமல் முன்வந்து நிமிர்ந்து அமர வேண்டும் என்பதே இதன் கூற்று. இரண்டு கால்களும் பூமியில் பதிய இருக்க வேண்டும்.

    * வயிற்றினை லேசாக உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்.

    * வலது முழங்காலினை தூக்கி படத்தில் காட்டியுள்ளதைப் போல் பிடியுங்கள். 20 நொடிகள் வைத்திருந்து காலின் கீழே வையுங்கள். இதுபோல் இடது முழங்காலினை மடக்கி செய்யுங்கள்.

    * இதுபோல் நாள் ஒன்றுக்கு 20-30 முறை இரண்டு கால் களிலும் செய்யுங்கள்.

    பயிற்சி 2 (படம் 2)

    * உங்கள் நாற்காலி நல்ல உறுதியானதாக இருக்க வேண்டும்.
    * கால்களை தரையில் படுவது போல் அமருங்கள்
    * கைகளால் நாற்காலியின் கைகளை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் படத்தில் காட்டியுள்ளது போல் மடக்கினால் போல் தூக்கி 20-30 விநாடி நிறுத்துங்கள். பிறகு கால்களை தொங்கவிடுங்கள். இதுபோல் 10 முறையாவது செய்யுங்கள்.



    பயிற்சி 3:

    முன்பு கூறியதுபோல் நாற்காலியில் தரையில் கால்கள் படும்படி அமருங்கள். கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக்கொள்ளுங்கள். கால்களை மடக்கி நாற்காலியில் குதிங்கால்கள் படும்படி செய்யுங்கள்.

    * மெதுவாக உங்கள் இடதுபுறம் லேசாக திருப்புங்கள். 10-20 விநாடி இருங்கள்.
    * பின்பு நேர்நிலைக்கு வந்து காலை இயல்புநிலையாக பாதம் தரையை தொடும்படி அமருங்கள். மீண்டும் பயிற்சியினை இயன்ற வரை செய்யுங்கள்.

    பயிற்சி 4 : (படம் 4)

    பாதங்கள் தரையினை நன்கு தொடுமாறு நாற்காலியில் சற்று முன்வந்து அமருங்கள்.
    * படத்தில் காட்டியுள்ளது போல் வலது கையை மேலே தூக்கி இடதுகையால் வலது காலை தொடுங்கள்.
    * பின்னர் இடது கையினை மேலே தூக்கி வலது கையினால் இடது காலை தொடுங்கள்.
    * பிறகு இயல்பு நிலையில் அமருங்கள்
    * முடிந்தவரை செய்யுங்கள்

    பயிற்சி 5: (படம் 5)


    * கால்கள் தரையில் படும்படி நாற்காலியில் அமருங்கள்
    * கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக் கொள்ளுங்கள்.
    * கால்களை பிடித்து நாற்காலியின் மீது வைத்து கைகளை அழுத்தி நாற்காலியில் லேசாக எழுங்கள். படத்தினைப் பாருங்கள். சிலநொடிகள் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.

    இப்பயிற்சியினை செய்ய வயதில் இளையவர்களாக இருப்பது நல்லது. உறுதியான அகலமான மர நாற்காலி சிறந்தது. மெலிதான நாற்காலிகளில் இப்பயிற்சியினை செய்யாதீர்கள். உணவு உண்டவுடன் செய்யாதீர்கள்.
    உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. எந்த உடற்பயிற்சிகள் தொப்பையை விரைவில் குறைக்க உதவும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன.

    உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும்.

    நாம் இளம் வயதில் வைத்திருந்தது போல வலுவான மூட்டுகள் தற்போது இருப்பதில்லை. இதனை மீட்டுக் கொண்டு வர ஜாக்கிங் அல்லது வாக்கிங் சரியாக இருக்காது. அதற்கு சரியான தீர்வு எலிப்டிகல் டிரைனர் மட்டுமே.

    சைக்கிள் பயிற்சி இல்லாமல் தொப்பை குறைப்பு சாத்தியமில்லை. கார்டியோ உடற்பயிற்சிகளால் தொப்பையை குறைப்பது முழுமையடையாது. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவடையச் செய்ய வேண்டும். சைக்கிள் பயிற்சி செய்வதன் மூலம், அடிவயிறு சீரடைதல், உடல் சுழற்சி, தசைகள் செயல்பாடு அதிகமாதல் ஏற்படும்.

    சீராக தொப்பையை குறைக்க, சைக்கிள் பயணம் மிகவும் உதவி செய்கிறது. மேலும் சைக்கிளில் பயணிப்பதன் மூலம் பல்வேறு இடங்களையும் பார்வையிட முடிகிறது. சைக்கிளின் வேகம், பயிற்சியின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, 30 நிமிடத்தில் 250 முதல் 500 கலோரிகள் கரைக்கலாம்.

    பின்புறமாக உடலை சாய்த்து, முன்னால் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு தொப்பை குறைப்பு சாத்தியமாகிறது. தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தியும், உடலை 90 டிகிரிக்கு உயர்த்தியும் பயிற்சி செய்யலாம். 3 செட்களில் 12 முதல் 16 வரை எடுக்கலாம்.

    தொப்பையை குறைக்க மிகச்சிறந்த பயிற்சி. தரையில் படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு நேராக உயர்த்த வேண்டும். அப்போது தலையும் சிறிது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அதிக கலோரிகளை எரிக்கலாம்.

    ஒரு பெரிய ரப்பர் பந்தில், உடலை கிடத்தி கைகளை மார்பின் குறுக்காகவோ அல்லது தலைக்கு பின்புறமாகவோ வைக்கவும். உடலை பக்கவாட்டிலும், முன்னும், பின்னும் நகர்த்தி பயிற்சி செய்யலாம்.
    வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன? அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே குட்டி ஜிம் அமைத்துவிடுகிறார்கள். வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்...

    படுக்கை அறை, பூஜை அறைபோல முடிந்தவரை ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்குங்கள். ஜிம் மேட் தரையில் பதிக்க வேண்டியது அவசியம். ஜிம் கருவிகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் ஜன்னல்களை வைக்காதீர்கள். அதே சமயம் வெளிச்சத்துக்கு கண்ணாடித் திரை வைப்பது நல்லது. ஜிம் அறையில் குளிர்சாதன வசதி இருப்பது நல்லது.

    தரையில் செய்யும் பயிற்சிகள் அவசியம்.  எனவே, ஜிம் அமைக்கும் அறையில் தரையில் இரண்டு மூன்று பேராவது ஒரே சமயத்தில்  நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இடம் ஒதுக்குவது அவசியம்.

    வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யார் யாரெல்லாம் ஜிம் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிக் கருவிகள் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு ஜிம் கருவிகளை வாங்க வேண்டும். வயதானவர்கள், பெண்களுக்கு கார்டியோ பயிற்சிக்கான சாதனங்கள் சிறந்தவை. இளைஞர்களுக்கு, கார்டியோ மற்றும் உடலை உறுதிப்படுத்தும் கருவிகளை வாங்கலாம்.

    வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு முன்னர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரப்பி நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேட்டு, ஜிம் அறையை அமைக்கலாம். ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு ஜிம் கருவியையும் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்ட பின்னரே கருவிகளை வாங்கிப் பொருத்தி, பயன்படுத்த வேண்டும்.

    டிரெட்மில் போன்றவை பேட்டரியில் இயங்கக்கூடியவை. சுமார் 1.5 கிலோ வாட் திறனில் இயங்கக்கூடிய டிரெட்மில் பயன்படுத்துவது நல்லது. விலை குறைந்தது என்பதற்காக மட்டும் ஜிம் கருவிகளை வாங்கிவிடக் கூடாது, வாரன்டி இருக்கிறதா, டிரெட்மில்லில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டுக்கு வந்து சரிசெய்து கொடுப்பார்களா என்பதை எல்லாம் நன்கு விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.
    தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் (Before warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) தசை மண்டலங்களை, உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.
    உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை.

    தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்... இவற்றைச் செய்வதற்கு முன்பும் (Before warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.

    இது தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து (Flexibility) உங்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை.



     உடற்பயிற் சிகள் செய்வதற்கு முன் சரியான முறையில் தயாராவதும், உடற்பயிற்சிகள் செய்து முடித்தவுடன், உடனே திட்டமிட்ட, சரியான முறைகளில் களைப்பை நீக்குவதுமே! இந்த முறையை கடைப்பிடிப்பதால் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் ஆக்ஸிஜன் செல்கிறது.

    இதன் காரணமாக ரத்த ஓட்டம் எந்த ஒரு தடையும் இல்லாமல் சீராக ஓடுகிறது. உடலை களைப்படையச் செய்யும் அமிலத்தை (Lactic Acid) அறவே நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசை மற்றும் எலும்பு இணைப்புகளின் முறுக்கை (Tightness) இறுக்கத்தன்மையை (Stiffness) முழுவதுமாக குறைத்து அடுத்த வேலைப்பளுவை செய்ய தயாராவதோடு, அடுத்தடுத்த நாட்களுக்கு, வாழ்க்கை முழுவதும் உடற்பயிற்சியை மகிழ்ச்சிகரமாக, ஆர்வத்தோடு செய்யவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது.

    இந்தச் சிறப்புப் பயிற்சியை நல்ல பயிற்சியாளரிடம் கற்று செய்ய வேண்டும். அவர்களின் மேற்பார்வையில் செய்வது மிக முக்கியம். ஏனெனில், சிறிய எலும்புகளின் இணைப்புகள், உறுதியான எலும்புகளின் இணைப்புகள், நீண்ட தசைகள், சிறிய தசைகள், மென்மையான தசைகள், கடின-கெட்டியான தசைகள் என அதற்கு ஏற்றவாறு சுருக்கி - நீட்டும் பயிற்சியும் அதன் நேரமும் வேறுபடும்.

    உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங், வார்ம் அப் பயிற்சிகள் அவசியமானது தானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    முன்பு எல்லாம் பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஜிம்முக்குச் செல்வார்கள். இன்றோ இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்பினரும் ஜிம்முக்குப் படை எடுக்கிறார்கள்.

    பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம்.

    ஜிம்முக்குள் நுழைந்ததுமே சினிமாவில் ஹீரோக்கள் உடற்பயிற்சி செய்வதைப் போல கடினமான வெயிட்ஸ் தூக்குவது, டம்பிள்சை தூக்கி புஜபலம் பார்ப்பது என வீரதீர சாகசங்களில் இறங்காதீர்கள். இதனால், ஒரே நாளில் கை, காலில் சுளுக்கோ ரத்தக்கட்டோ ஏற்பட்டு உடற்பயிற்சியே வேண்டாம் என்று ஜிம்மைவிட்டு ஓடும் மனநிலைக்குச் சென்றுவிடுவீர்கள்.

    கடினமான மெஷின் வொர்க் அவுட்ஸ் எல்லாம் உடலை நன்கு மேம்படுத்தி வைத்திருப்பவர்களுக்கானவை. தொடக்க நிலையில் உடல் தசைகளை உடற்பயிற்சிக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியது அவசியம். எனவே, தலை முதல் பாதம் வரை உள்ள எல்லா இணைப்புகளையும், உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், வார்ம் அப் பயிற்சிகள் மிகவும் அவசியம்.

    ஜிம் ட்ரெய்னரிடம் கலந்து ஆலோசித்து எத்தனை நாட்களுக்கு வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் மட்டும் செய்துகொண்டிருக்க வேண்டும் என முடிவு செய்தபின் அடுத்தகட்ட உடற்பயிற்சிக்குள் நுழையுங்கள். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எந்தவிதமான உடற்பயிற்சி என்றாலும் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டியது அவசியம். ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாக கண்டதையும் தூக்கி பயிற்சி செய்து உடலைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். 
    ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.

    15 வயது தொடக்கத்தில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.

    20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.

    30 வயது முதல் 40 வயது வரை உள்ள காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.

    40 வயதின் தொடக்கத்தில், 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.

    60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடப்பயிற்சியை செய்து வரலாம்.
    ×