search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News Knowledge Selection on behalf of Excel Educational Institutions"

    எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது.

    குமாரபாளையம்  எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸல் பொறியியல் கல்லூரி தன்னாட்சி மற்றும்  எக்ஸல் வணிக அறிவியல் கல்லூரி இணைந்து “எக்ஸல் அறிவுத்திறன் தேர்வு 2022”  பிளஸ்-2 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

    தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    மேலும் தேர்வில் கலந்து கொண்ட அணைத்து மாணவர்களுக்கும் எக்ஸல் பொறியியல் கல்லூரி தன்னாட்சி, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் எக்ஸல் மருத்துவ கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் தங்களது துறை பற்றிய சிறப்பம்சங்களை விளக்கவு ரையாக வழங்கினர்.

     இந்நிகழ்வில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன்,  துணைத்தலைவர் டாக்டர்.மதன்கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வினை தொடங்கி வைத்தனர். இதில் எக்ஸல் கல்வி நிறுவங்களின் தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், நிர்வாக இயக்குனர்  பொம்மண்ண ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி தன்னாட்சி மற்றும் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேரா சிரியர்கள், மாணவர்கள் மற்றும் எக்ஸல் கல்வி நிறுவ னங்களின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  செய்திருந்தனர்.
    ×