search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering seat"

    இந்தியா முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் (2019-2020) 50 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் கூறியுள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பி.சி.சந்திரசேகரன் எழுதிய ‘நவீன அறிவியல் சிந்தனைகள் (மாடர்ன் சயின்டி பிக் தாட்ஸ்’) என்ற புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.

    அதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் டி சகஸ்ரபுத்தே கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ‘‘தற்போது நாடுமுழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 14.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில் 8 முதல் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்து என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2019-2020) 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். தொடக்கத்தில் 10 ஆயிரம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 16.5 லட்சம் இடங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் அவை 14.5 லட்சம் இடங்களாக குறைக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற மற்ற கல்வி நிலையங்கள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்குமா? என அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர் என்ஜினீயரிங் மாணவர்கள் மற்ற துறை மாணவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார். #AnnaUniversity
    ×