search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants continue to roar"

    வேப்பனஹள்ளி பகுதியில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    வேப்பனஹள்ளி, 

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதிக்கு 11 யானைகள் ஒரு குழுவாக புகுந்தன. பின்னர் அவை குழுக்களாக பிரிந்து சீகரலப்பள்ளி, மகாராஜாகடை, கொங்கண ப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுற்றிவருகின்றன. 

    இரவு நேரங்களில் இந்த யானை கூட்டங்கள் அருகேயுள்ள கிராமப்பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசமாக்கி வருகின்றன. இது பற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணித்து அவைகளை மீண்டும்  ஒரே குழுவாக்கி கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ஆனால் அந்த பகுதிகளில் மின்வேலிகள் உள்ளதால் யானைகள் அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றன. எனவே வனத்துறையினருக்கு போக்கு கட்டிவிட்டு மீண்டும், மீண்டும் அவை கிராமத்திற்குள் நுழைந்து விடுகின்றன. 

    இதையடுத்து ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு அருகில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்கவும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் காவல்காக்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு ள்ளது.
    இருப்பினும் யானை கூட்டத்தை நிரந்தரமாக அப்பகுதியில் இருந்து விரட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×