search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical workers demonstrate"

    கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ எதிர்த்து மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ எதிர்த்து மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க சரவணன், தொ.மு.ச. பசரவராஜ், சி.ஐ.டி.யூ. சதீஷ்குமார், அம்பேத்கர் யூனியன் சிவப்பிரகேஸ்வரன், ஐக்கிய சங்கம் திருமலைவாசன் மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யூ. கருணாநிதி நன்றி கூறினார். 

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, லாபம் ஈட்டக்கூடிய பகுதிகள் தனியாருக்கு தாரை வார்த்ததால், நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் மின்வாரியங்களின் தலையில் சுமத்தப்படும். விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மின்கட்டணம் 10 மடங்கு வரை உயரும் அபாயம் ஏற்படும். தொழிலாளர் நல சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்படும். ஓய்வூதியம் என்பது மறுக்கப்படும். தொழிற்சங்கம் வைத்து போராடும் உரிமை என்பது மறுக்கப்படும். தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். 

    தொழிலாளர் நல சட்டங்கள் காற்றில் பறக்க விடப்படும். இதுபோன்ற அவல நிலையை போக்கிட தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
    ×