search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dutee Chand"

    ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீராங்கனை டுட்டீ சந்த் 11.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி வென்றார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்.

    தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடிய டுட்டீ சந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார்.

    விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.

    பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார். எடிடியோங் ஓடியோங் அரையிறுதியில் 11.38 வினாடிகளிலும், டுட்டீ சந்த் 11.43 வினாடிகளிலும் பந்தய தூரத்தை கடந்திருந்தனர்.

    சீன வீராங்கனை யோங்லி வெய் 11.33 வினாடிகளில் கடந்த வெண்கலம் வென்றார். இவர் அரையிறுதியில் 11.29 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார்.
    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 11.43 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்.

    இறுதிப் சுற்றுக்கான அரையிறுதி ஒன்றில் 7 பேருடன் டுட்டீ சந்த் பங்கேற்றார். இவர் 11.43 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 3-வது இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதி 2-ல் சீன வீராங்கனை யோங்லி வெய் 11.29 வினாடியில் பந்தைய தூரத்தை கடந்து முதல் இடம்பிடித்தார்.
    கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். #DuteeChand #National100mrecord #InterStateAthleticsChampionships

    கவுஹாத்தி:

    தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுகாத்தி நகரில் நடைபெற்று வருகிறது. 

    இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

    இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதற்கு தகுதிபெற 100 மீட்டர் தூரத்தை 11.67 வினாடிகளில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #DuteeChand #National100mrecord #InterStateAthleticsChampionships
    ×