search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water completed soon"

    ராஜபாளையம் நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நகராட்சி ஆணையாளர் விடுதியில் கட்டப்பட்டு வரும் ஜம்பு தொட்டியையும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் மலையடிப்பட்டி அம்பேத்கார் நகரில் நடைபெற்று வரும் நீர்த்தேக்க தொட்டி காமராஜர் நகரில் நடைபெற்று வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    நிர்வாக பொறியாளர் தங்க அழகு, உதவி நிர்வாக பொறியாளர் ராஜாமணி உதவி பொறியாளர் ரவீந்திரன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சங்கரன்கோவில் முதல் ராஜபாளையம் வரை உள்ள 33 கி.மீ குழாய் பதிக்க வேண்டிய இடத்தில் தற்போது 14 கி.மீ குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 25 பணிகள் நிறைவடைந்து உள்ளன. மொத்த மதிப்பீட்டில் ரூ. 197 கோடியில் தற்போது ரூ. 36 கோடி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கட்டுமான கம்பியின் பலம் தொட்டி பில்லரில் வெடிப்பு இல்லாமல் தரமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    மேலும் திட்டத்திற்கான பணிகள் மெதுவாக நடை பெறுவதாகவும் இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பணியை துரிதப்படுத்தி ராஜபாளையம் நகர் மக்களுக்கு விரைவில் தாமிரபரணி தண்ணீரை வழங்குமாறு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ராஜபாளையம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், நகர துணை செயலாளர் சரவணன், உதுமான், மாயாவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×