search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue fever spread"

    திருத்தணி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் பொது மக்கள் பீதியுடன் தவித்து வருகிறார்கள். #denguefever

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த அருங்குளம்கண்டி கையை சேர்ந்தவர் சபாபதி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாபதியின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக்க சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசஅம்மாள், சரிதா, தர்ஷினி ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அருங்குளம் கண்டிகையில் மேலும் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொது மக்கள் பீதியுடன் தவித்து வருகிறார்கள்.

    எனவே ஆரம்ப கட்டத்திலேயே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சலால் திருவள்ளூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #denguefever

    ×