search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber crime cops alert"

    • ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • லோன் ஆப்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் லோன் ஆப், ஆன்லைன் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அந்த ஆன்லைன், லோன் ஆப் மூலம் கடன் பெற்றால், பெரும் விளைவை எதிர்கொள்ள நேரிடும்.

    இதில் பான்கார்டு, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் உங்களது புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யச் சொல்லும். அந்த ஆப்-ல் உள்ள விதிமுறைகளை உறுதி செய்யச்சொல்லும். பின்பு செல்போன் எண்ணை எடுத்து கொள்ளும். நாம் எப்போதும் மற்ற ஆப்-ல் அனுமதி கேட்பது போல இருக்கும் என்று எண்ணி உறுதிசெய்து லோன் வாங்கிவிடுவோம்.

    நாம் வாங்கிய கடனுக்கு மிக அதிகபட்சமான வட்டியை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். அப்படி நாம் கட்டா விட்டால் வட மாநிலத்தைச் சேர்ந்த சில திருட்டு கும்பல் நம்முடைய மொபைலை ஹேக் செய்து, நமது மனைவி குழந்தைகளின் போட்டோவை திருடி மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    நம் செல்போனில் பதிவு செய்துள்ள மற்ற எண்களுக்கும் தகாத வார்த்தைகளால் குறுந்தகவல் அனுப்பியும் மற்றும் நம் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதனை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று நம்மை மிரட்டுவார்கள். நாம் அதற்கு பயந்து அவர்கள் கூறிய வட்டியையும், அசலையும் செலுத்திவிட்ட பின்னரும் மீண்டும் பணத்தை நம்மை கட்ட சொல்லி மிரட்டுவார்கள்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி கூறியதாவது:-

    லோன் ஆப் மூலம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற வடமாநில கும்பல்கள் பல்வேறு மோசடிகளை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.ஆகவே இதுப்போன்ற ஆப் லோன்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×