search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket Tournament"

    • விழாவிற்கு சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய 3-வது ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சாயர்புரம் போப் கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி தொடங்கி கடந்த 18-ந் தேதி வரை ஞாயிற்று க்கிழமைகளில் நடந்தது. இதில் மாவட்ட அளவில் 50 அணிகள் கலந்து கொண்டன.

    இறுதிப் போட்டியை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா புளிய நகர் மகாத்மா காந்தி நினைவு வாசக சாலை யில் நடந்தது. சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். புளிய நகர் நல்லாசிரியர் ஞானராஜ், சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், புளிய நகர் ஊர் தலைவருமான அறவாழி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    போட்டியில் முதலிடம் பிடித்த புளிய நகர் இளைஞர் நற்பணி மன்ற அணிக்கு பரிசு கோப்பையும், ரொக்க பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த வாகைகுளம் மதர் தெரசா என்ஜினீயரிங் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 8 ஆயிரம் ரொக்கமும், 3-வது இடம் பிடித்த புதுக்கோட்டை கே.எல்.சி.சி. அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமும், 4-வது இடம் பிடித்த நடுவக்குறிச்சி அணிக்கு கோப்பை, ரூ. 2ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் 5, 6-வது இடம்பிடித்த அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, சாயர்புரம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணி, ஊடகப்பிரிவு மரியராஜ், இளைஞர் காங்கிரஸ் பிளஸ்வின், சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கண்ணன், இந்திரா, மகிளா காங்கிரஸ் டெய்சி செல்வின், புளிய நகர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×