search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona Vaccine camp"

    • தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல் :

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரித்தப்படுத்தப் பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    பஸ் நிலையம், ஆஸ்பத்திரி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.பஸ் நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆ ய்வு செய்தார்.

    இதில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகர் நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×