search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor Election Cancel"

    குன்னூரில் இன்று நடைபெறுவதாக இருந்த தேயிலை தோட்ட கூட்டுறவு சங்க தேர்தலை நிர்வாகம் ரத்து செய்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட கூட்டுறவு சிக்கன சங்கத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் உள்ளது. இந்த சங்கத்தில் தலைவர் உள்பட 11 நிர்வாக குழு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த உறுப்பினர்களுக்கான தேர்தல் 2 மாதத்திற்கு முன்பு நடைபெறுவதாக இருந்தது.

    தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி நிர்வாகம் தேர்தலை ரத்து செய்தது. இதனை எதிர்த்து அ.ம.மு.க.வினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு செப்டம்பர் 1-ந்தேதி (இன்று) தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

    இதனையடுத்து அ.தி.மு.க., அ.ம.மு.க., எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. உள்பட 54 பேர் கடந்த 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அன்றே வேட்பு மனுபரிசீலனை நடைபெற்றது. இதில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 12 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். மீதமுள்ள 27 பேர் போட்டியிட்டனர். இன்று காலை 8 மணிக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக போலீசார் கூறியதின் பேரில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தலை நிர்வாகம் ரத்து செய்தது. அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை கண்டித்து இன்று சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அ.ம.மு.க. அறிவித்துள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×