search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector survey polling area"

    அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்‘ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

    இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×