search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector office siege"

    • திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஒதுக்கிய குடியிருப்பு வீடுகள் உள்ளன.
    • அந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்தனர்.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஒதுக்கிய குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் வசித்து வந்த குடும்ப நபர்களின் எண்ணிக்கை விரிவடைந்த நிலையில் அந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை காலி செய்ய மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து குடிசை வீடுகளில் வசித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சேதுபதி, லோகநாதன், சந்துரு ஆகியோர் தலைமையில் இன்று பானை, குடங்களுடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் ஆணையை மறு பரிசீலனை செய்து மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பானை பாத்திரங்கள் மற்றும் குடங்களுடன் குடியிருப்பு வாசிகள் திரண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×