search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspects"

    • கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.சுப்புலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் அரசு இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களிடமிருந்து நேரடியாக மற்றும் அரசு இணையதளத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரை அறிவுறுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளித்திட வருகை தந்த பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, பள்ளி வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சமையலறையினை சுத்தமா கவும், சுகாதாரமாகவும் வைத்திட சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் எம்.சுப்புலாபு ரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    • ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • அரசு விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காப்பாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி–க்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது விடுதியில் பணியாற்றும் பணி–யாளர்கள் எண்ணி க்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, மாணகளின் எண்ணிக்கை, வருகை–ப்பதிவேடு, விடுதி யில் வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கல்வி கற்க செய்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி சார்ந்த திட்டங்கள் மட்டுமல்லாமல் தங்கி பயிலுவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து வருகிறது.

    எனவே, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களை முழுமையாக விடுதி கா–ப்பாளர்கள் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசின் மூலம் பெற்று தந்து அவர்களை நல்ல முறையில் கல்வி கற்க செய்திட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தேனியில் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விளையாட்டு வசதியினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    தேனி

    தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாணவர்கள் தங்கும் அறையினை சுத்தமாக வைத்து கொள்வதையும், மாணவர்கள் பள்ளி முடிந்து விடுதிக்கு வந்தவுடன் அவர்கள் கை, கால்களை தண்ணீரில் கழுவிய பின் விடுதிக்குள் அனுமதிப்பதையும் முறையாக காப்பாளர் தினந்தோறும் கண்காணித்திடவும், விடுதியின் சுற்றுப்புறப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், தினந்தோறும் மாணவர்கள் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிப்பறை பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்திடவும் அறிவுரைகள் வழங்கினார்.

    முன்னதாக, விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். மேலும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    மாணவர்களிடம் கலந்துரையாடிய போது, விடுமுறை நாட்களில் விளையாட்டு சம்பந்தமாக ஏதேனும் வசதி ஏற்படுத்தி தரவேண்டி கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கலெக்டர் விளையாட்டு வசதியினை ஏற்படுத்தி தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    • தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்

    தேனி:

    தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, பள்ளி வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், எடை அளவிடும் கருவி, விளையாட்டு பொருட்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களிடம் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், மாணவ-மாணவிகளுக்கு தேவை–யான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளிகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் சிறு வணிக கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களின் தரம், காலாவதியாவதற்கான நாள் குறித்து முறையாக தினந்தோறும் கண்காணித்திடவும் பள்ளி தலைமையாசிரியருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அங்கன்வாடி மைய–ங்களில் சுற்றுப்புறப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமாரித்திடவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தினந்தோறும் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி முறையாக வழங்கிடவும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


    திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் புதிய பஸ் நிலைய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய பணிகளை கலெக்டர் விசாகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பஸ் நிலைய பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கான்கிரீட் கலவை குறித்தும் அதன் ஆய்வு தொடர்பான பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட கடைகள், பஸ்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அங்கு மழைநீரை சேகரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். பணிகளை குறித்த நேரத்தில் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


    ×