search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore central prison"

    கோவை மத்திய சிறையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த தகராற்றில் அடிதடி வழக்கில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷ் என்ற கைதி அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
    கோவை:

    கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கும் மற்றொரு கைதியான விஜய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், இருவருக்கும் கைக்கலப்பு ஏற்பட்டது.

    இந்த மோதலில் விஜய் கல்லால் தாக்கியதில் ரமேஷ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×